தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கையில் 17 துறைகள்!

முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியலை கவர்னர் அர்லேகர் இன்று வெளியிட்டுள்ளார்.

சென்னை,

தமிழகத்தின் முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், இன்று முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் பட்டியலை கவர்னர் அர்லேகர் வெளியிட்டுள்ளார்.

அதன்படி, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் கட்டுப்பாட்டின் கீழ் காவல், உள்துறை, பொது நிர்வாகம், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை உள்பட 17 துறைகள் வருகின்றன.

அதாவது, பொது, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப் பணி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் துறை, உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம், மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், நகர்ப்புறம் மற்றும் குடிநீர் வழங்கல் என 17 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT