தமிழக செய்திகள்

சீர்காழியில் நடைபயிற்சியின்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று தொடங்கினார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அவர் தனது பிரசா ரத்தை கடந்த மாதம் 31-ந்தேதி அவரது சொந்த ஊரான திரு வாரூரில் இருந்து தொடங்கினார்.

ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்த அவர் 3-வது கட்ட பிரசாரத்தை புதுச்சேரியில் நேற்று தொடங்கினார். இன்று (செவ்வாய்க்கிழமை) மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் உள்ள நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் ஆகிய தொகுதி வேட்பாளர்களையும், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய தொகுதிகளின் வேட்பாளர்களையும் ஆதரித்து வைத்தீஸ்வரன்கோவில்- சீர்காழி இடையே சட்டநாதபுரத் தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாலை 4 மணிக்கு கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த நிலையில், சீர்காழியில் தென்பாதி பகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறமும் நின்றுகொண்டிருந்த பொதுமக்களிடமும் நலம் விசாரித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் செந்தில் செல்வனை முதல்-அமைச்சர் ஆதரித்து வாக்கு சேகரித்தார்.