தமிழக செய்திகள்

38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதியின் பிறந்தநாளில் பெரிய அளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொண்டார். மேலும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பல மக்கள் நலத் திட்டங்களை முதல்-அமைச்சர் இன்று துவக்கி வைக்க இருக்கிறார்.

அதன்படி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்டந்தோறும் 1,000 மரக்கன்றுகள் வீதம் 38,000 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 38 மாவட்டங்களிலும் வனத்துறை சார்பில் தலா 1,000 மரக்கன்றுகள் விதம், 38,000 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.

மேலும் 36 தூய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், நிவாரண உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

SCROLL FOR NEXT