தமிழக செய்திகள்

தனி விமானம் மூலம் கொடைக்கானல் புறப்பட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுக்கிறார்.

சென்னை,

சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குகள் திரட்டினார்.

அவர், ஒரு மாத காலம் ஓய்வின்றி தேர்தல் களப்பணியில் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டார்.

அதன்படி அவர், சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 11 மணி அளவில் குடும்பத்துடன் மதுரை புறப்பட்டு சென்றார். மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு ஓய்வெடுக்கிறார். அங்கிருந்து சாலைமார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவர் ஒரு வார காலம் குடும்பத்தினருடன் தங்கி இருந்து ஓய்வு எடுக்க உள்ளார்.