தமிழக செய்திகள்

கவர்னர் ஆர்.என்.ரவியுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கவர்னர் ஆர்.என்.ரவி, சில நாட்களில் மேற்கு வங்காள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எம்.எம்.ஸ்ரீவத்சவா ஓய்வு பெற்றார். இதையடுத்து கேரள ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்த எஸ். ஏ.தர்மாதிகாரி சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கி உள்ளார்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் புதிதாக பதவி ஏற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் அவருக்கு மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதேபோல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்காள கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் மேற்கு வங்காள கவர்னராக பொறுப்பேற்க உள்ளார். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவியையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அவருக்கு மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.