சென்னை,
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் அண்ணாவின் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ. ராசா மற்றும் கட்சியினா் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜா் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன, திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.