தமிழக செய்திகள்

காஞ்சிபுரத்திற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் முதல் முறையாக இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நகரான காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு காலை 9.30 மணி அளவில் செல்லவிருக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு அவரது பயணப்பாதையில் வழிநெடுகிலும் சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகரம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்தை புதுப்பொலிவுடன் தயார்ப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT