தமிழக செய்திகள்

தொழிலாளர் தின நினைவுச்சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

நமது உழைப்புக்கான பலன் 4ம் தேதி கிடைக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டு தோறும் மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று மே 1ம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள தொழிலாளர் தின நினைவுச்சின்னத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களும் மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நமது உழைப்புக்கான பலன் 4ம் தேதி கிடைக்கும். அதில் துளி அளவும் மாற்றமில்லை. எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் திமுக செயல்படுகிறது’ என்றார்.