சென்னை,
சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் - உதயநிதி பரஸ்பர வணக்கம் தெரிவித்துக்கொண்ட சம்பவம் உறுப்பினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று காலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக முதல்-அமைச்சர் விஜய் காலை 9.57 மணிக்கு சட்டசபைக்குள் வந்தார். அப்போது அவர் உறுப்பினர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். காலை 9.58 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சபைக்கு வந்து தனது இருக்கையில் அமர்ந்தார்.
அப்போது முதல்-அமைச்சர் விஜய்யும், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் ஒருவொருக்கொருவர் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்துக்கொண்டனர்.
உதயநிதி ஸ்டாலின் நேற்று கைதாகி விடுதலையான நிலையில் இன்று சட்டசபைக்குள் வந்ததும் எப்போதும் போல இருவரும் ஒருவொருக்கொருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.