சென்னை,
தமிழக முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்ற நிலையில் பல்வேறு துறைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் அடுத்தகட்ட திட்டங்கள், ஏற்கனவே உள்ள செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.