தமிழக செய்திகள்

சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு

சென்னை புழல் சிறையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை,

சென்னை புழல் சிறையில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.

இந்த நிலையில், சென்னை புழலில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் நிலை மற்றும் அங்குள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, உணவு தயாரிக்கப்படும் கூடும், மருத்துவ வசதிகள் என அனைத்தையும் முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்-அமைச்சரின் ஆய்வின்போது உயர் அதிகாரிகள், சிறைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.