தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து

முழு நேர கவர்னருக்கான அதிகாரப்பூர்வ உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டிருந்தார்.

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் ராஜேந்திர அர்லேகர், தமிழ்நாட்டின் முழு நேர கவர்னராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிரந்தர கவர்னர்

தமிழகத்தின் முழு நேர கவர்னராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நியமிக்கும் அதிகாரப்பூர்வ உத்தரவை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளம் மாநில கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராகவும் அவர் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்தான், தற்போது அவர் தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மனமார்ந்த வாழ்த்துகள்

இந்நிலையில் தமிழ்நாட்டின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள அர்லேகருக்கு முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி, மாநில உரிமைகள் மற்றும் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT