சென்னை,
பெரம்பூரில் உள்ள ரேஷன் கடையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கும் திட்டத்தை முதற்கட்டமாக 50 பேருக்கு வழங்கி புதிய ரேஷன் கடையில் 10 குடும்பங்களுக்கு அடையாளமாக ரேஷன் பொருட்களை வழங்கினார். ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு சர்க்கரை, அரிசி, பருப்பு, உள்ளிட்டவற்றை முதல்-அமைச்சர் விஜய் வழங்கினார். முன்னதாக
பெரம்பூர் தொகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு செய்தார்.
இம்மாத இறுதிக்குள் தமிழகத்தில் 73,000 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதல்-அமைச்சரான பிறகு தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்குச் சென்ற முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், எம்.எல்.ஏ. அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தையும் திறந்து வைத்தார். பிறகு, சர்மா நகர் 10ஆவது தெருவில் உள்ள நியாய விலைக் கடையினைப் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினை வழங்கினார்.