மதுரை,
தமிழக முதல்-அமைச்சர் விஜய், இன்று மதுரையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்து வழிபட்டார். இது குறித்து அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது;-
“தமிழக முதல்-அமைச்சர் விஜய் அனைத்து சமய கடவுள்கள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார். அனைத்து சமயங்களை பின்பற்றக்கூடிய மக்கள் மீதும் முதல்-அமைச்சர் விஜய் அன்பு வைத்துள்ளார். அதைத்தான் இன்று நாம் பார்த்தோம்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் திருப்தியாக சாமி தரிசனம் செய்தார். மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் வழிபட்டு கடவுளின் அருளைப் பெற்றார். தமிழக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும், தமிழ்நாடு நன்றாக இருக்கணும் என்பதுதான் அவரது எண்ணம்.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.