தமிழக செய்திகள்

குதிரை பேரத்தில் முதல்-அமைச்சர் விஜய்: கவர்னருக்கு திமுக சார்பில் புகார் கடிதம்

முதல்-அமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோவே ஒப்புக்கொண்டதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

குதிரை பேரம்

கவர்னருக்கு தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-

கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

புகார் கடிதம்

இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

இத்தகைய குதிரை பேரத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தமிழ்நாடு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட திரு. வைகோ அவர்கள்!

நடவடிக்கை கோரி தி.மு.க. சார்பில் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி அவர்கள் மாண்புமிகு ஆளுநருக்குக் கடிதம்!

கடையநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. T.M. ராஜேந்திரன் மற்றும்… pic.twitter.com/OeIQygsn1B
— DMK (@arivalayam) July 1, 2026