மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) திறந்து வைக்கிறார்.
டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சான மேட்டூர் அணை மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் போன்ற 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இந்தாண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சரிவர மழை பெய்யாத காரணத்தால் குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதையடுத்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து செப் டம்பர் 1-ந் தேதி (அதாவது இன்று) தண்ணீர் திறந்துவிடப்படும் என்றும், அந்த தண்ணீர் 45 நாட்கள் திறந்துவிடப்படும் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு சேலம் வருகிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு வரும் அவர், அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக மேட்டூர் செல்கிறார்.
பின்னர் அவர் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை திறந்து வைக்கிறார். பின்னர் பாசனத்தின் தேவைக்கு ஏற்றவாறு திறக்கப்படும் தண்ணீரின் அளவானது படிப்படியாக அதிகரிக்கப்படும். முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை சாலையில் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
முதல்-அமைச்சர் விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் பொதுமக்கள் அதிகளவில் வரக்கூடும் என்பதால் அவர் செல்லும் வழி யில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், ஓமலூரில் இருந்து மேச்சேரி, மேட்டூர் வரை சாலையின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.