தமிழக செய்திகள்

ஆந்திரா சென்றடைந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் விஜய் ஆந்திரா சென்றுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்திப்பதற்காக இன்று விஜயவாடா செல்கிறார். இதற்காக மதியம் 2.30 மணிக்கு சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-அமைச்சர் விஜய், சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திரா புறப்படார்.

பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா சென்றடைந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண்பதற்காக மக்கள் அதிகம் பேர் விமான நிலையம் அருகே வந்திருந்தனர். விஜயவாடா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், அங்கிருந்து 30.5 கி.மீ. தொலைவில் உள்ள கனக துர்கா கோவிலுக்கு காரில் செல்கிறார்.

மாலை 4.55 மணிக்கு கோவிலுக்கு செல்லும் அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்கிறார். பின்னர், அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு காரில் புறப்படும் அவர் மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இல்லத்தை அடைகிறார். ஒரு மணி நேரம் அங்கிருக்கும் முதல்-அமைச்சர் விஜய், கோதாவரி - காவிரி ஆறு இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நீரை திறந்துவிடுவது குறித்து அம்மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் பேசுகிறார்.

இரவு 7.10 மணிக்கு சந்திரபாபு நாயுடு இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், உத்சவ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

SCROLL FOR NEXT