சென்னை,
டெல்லியில் நாளை (11-ந்தேதி) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நாட்டின் அனைத்து மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று காலை 10 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் மாநிலத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பயணத்தின் போது ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சில தேசிய கட்சித் தலைவர்களையும் சந்திக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்-அமைச்சர் வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை சென்னை திரும்புவார் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.