சென்னை,
தமிழக முதல் அமைச்சராக விஜய் கடந்த மே 10 ஆம் தேதி பதவியேற்றார். முதல் அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை விஜய் சந்தித்தார். தலைமை நீதிபதி இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
மரியாதை நிமித்தமாக ஐகோர்ட் தலைமை நீதிபதியை முதல் அமைச்சர் விஜய் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,தனது இல்லத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தார்சென்னை ஐகோர்ட்டின் 55-வது தலைமை நீதிபதியாக கடந்த மார்ச் 6 ஆம் தேதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.