தமிழக செய்திகள்

டெல்லி புத்தக வெளியீட்டு விழாவில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்கவில்லை - வைகோ

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த நூல்களை வெளியிட இருக்கிறார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 30 ஆண்டுகளில் நான் ஆற்றிய ஆங்கில உரைகளின் தொகுப்புகள் 4 தொகுப்புகளாக அச்சிடப்பட்டு. அதை டெல்லியில் 'கான்ஸ்டிடியூஷன் கிளப்'பில் ஆகஸ்டு 4-ந் தேதியன்று வெளியிட திட்டமிடப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்த நூல்களை வெளியிட இருக்கிறார். அவற்றின் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள முதல்-அமைச்சர் விஜய் இசைவளித்தார்.

கூட்ட நெரிசல்

ஆனால், நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்றால் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், அந்த நிகழ்ச்சியிலே பங்கெடுப்பதை தவிர்த்துவிடலாம் என்று முதல்-அமைச்சரிடம் கூறினேன். மேலும், அதே நூல்கள் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு சென்னையில் வெளியிடும்போது அதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.