தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்: துரை வைகோ

கூட்டாட்சியை மக்களும், எல்லா இயக்கங்களும் வரவேற்பதாக துரை வைகோ தெரிவித்தார்.

ராமநாதபுரம்,

மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:-

பத்திரிக்கை தோழர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்வது, விஜய் தற்போதுதான் முதல்வராக பதவியேற்றுள்ளார், சமீபத்தில் தான் முழுமையாக அமைச்சரவை நிரப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர். முதல்-அமைச்சர் விஜய் மற்றும் புதிய அரசாங்கத்திற்கும் சரி, குறைந்தது 6 மாதத்திலிருந்து 1 வருடம் வரை கண்டிப்பாக கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

ஜனநாயகத்தை பொறுத்தவரை ஒரு தனி நபரோ, ஒரு தனி இயக்கமோ இருப்பதை விட பல இயக்கம் சேர்ந்து செயல்படும்போது ஒரு தவறு நடந்தால் அதை கண்டிக்கலாம், சுட்டிக்காட்டலாம். மேலும் கூட்டாட்சியை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? மக்களும், எல்லா இயக்கங்களும் இதை வரவேற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.