சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
மகாராஷ்டிரா அரசைப் பார்த்து கற்றுக் கொள்ளுங்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே!
மராட்டியத்தில் சுமார் 56 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்யவும், முறையாக பயிர்க் கடனைத் திருப்பிச் செலுத்திய விவசாயிகளுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கவும் அம்மாநில முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஒப்புதல் வழங்கியுள்ள செய்தியைத் தாங்கள் அறிவீர்களா?.
விவசாயிகள் நலனை எப்படிக் காப்பது என்பதை மராட்டிய பாஜக அரசைப் பார்த்து இனியாவது கற்றுக் கொள்ளுங்கள். மாற்று சக்தி என்று வீணாக முழங்குவதை விட மற்ற மாநிலங்களைப் பார்த்து நன்முயற்சிகளைப் பின்பற்றுங்கள்.
உடனடியாக, தமிழக விவசாயிகளின் துயர் துடைக்கும் விதமாக, ஏற்கனவே அறிவித்த ஏமாற்றுத் தள்ளுபடியைத் திரும்பப் பெற்று, கொடுத்த வாக்குறுதிப்படி பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்யுங்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.