தமிழக செய்திகள்

வலுக்கும் சர்ச்சை: தவெக எம்.எல்.ஏ.க்களுடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை

தவெக ஆட்சி மீது எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கின்​றன.

சென்னை,

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து 6 மாதங்கள் கடந்த நிலையில், மாநிலத்தில் சட்​டம்-ஒழுங்கு சீர்​குலைந்​து​விட்​ட​தாகவும், கொலை, கொள்ளை பாலியல் குற்​றங்​கள் அதி​கரித்​து​விட்​ட​தாகவும் திமுக, அதிமுக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தொடர்ந்து விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கின்​றன. இது ஒருபுறம் இருக்க ஆளும் கட்​சி​யினரின் செயல்​பாடுகளும் சர்ச்​சைக்​குள்​ளாகி வரு​கின்​றன.

அந்த வகையில், துறையூர் எம்.எல்.ஏ.வும், துணை சபாநாயகருமான ரவி சங்கர், சில கோரிக்கைகளுடன் வந்த நபரை தாக்கியதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் கள்​ளக்​குறிச்சி தொகுதி தவெக எம்​.எல்.ஏ. அருள் விக்​னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் இதன் காரண​மாக ஆட்சி​யர் வீட்​டுக்​குப் போலீஸ் பாது​காப்​புப் போடப்​பட்​டுள்​ள​தாகவும் எதிர்க்​கட்​சிகள் குற்​றம் சாட்​டின. இந்த இரு விவகாரங்​களும் தமிழக அரசியலில் அதிர்​வலைகளை ஏற்​படுத்தி உள்​ளன.

இந்த சர்ச்சைக்களுக்கு மத்தியில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலு​வல​கத்​தில் இன்று அக்​கட்​சி​யின் ஒழுங்கு நட​வடிக்​கைக் குழு கூட்​டம் நடை​பெறுகிறது. இக்​கூட்​டத்​துக்கு முதல்​-அமைச்சர் விஜய் தலைமை வகிக்​கிறார். கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும் அமைச்​சரு​மான என்.ஆனந்த் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகி​கள் பங்​கேற்று சம்​பந்​தப்​பட்ட எம்​எல்ஏ.க்களிடம் விசா​ரணை நடத்த உள்ளனர்.

இக்​கூட்​டத்​தில் தவெக எம்.​எல்.ஏ.க்​கள் அனைவரும் தவறாமல் பங்​கேற்க வேண்​டும் என்று கட்சி தலைமை உத்​தர​விட்​டுள்​ளது. இதில் சம்​பந்​தப்​பட்ட எம்​எல்​ஏக்​கள் மீது கட்சி ரீதி​யி​லான ஒழுங்கு நட​வடிக்கை எடுக்​கப்​பட வாய்ப்​புள்​ள​தாகக் கூறப்​படு​கிறது. மேலும் இந்​தக் கூட்​டத்​தில், எம்​எல்​ஏக்​கள் தொடர்ந்து சர்ச்​சைகளில் சிக்​கு​வதைத் தடுப்​பது, பொது​மக்​களிடம் எப்​படி நடந்து கொள்​வது, கட்​சி​யின் நற்​பெயருக்​குப் பாதிப்பு ஏற்​படா​மல் செயல்​படுவது எப்​படி என்​பது உள்​ளிட்ட விவகாரங்​கள் குறித்து விஜய்​யும், என்.ஆனந்தும் ஆலோ​சனை நடத்த உள்​ளனர்.

SCROLL FOR NEXT