தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் இன்று ஈரோடு பயணம்: ரூ.1,110 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்

முதல்-அமைச்சர் விஜய் 'ரோடு ஷோ' வாயிலாக பொதுமக்களை சந்தித்து வருகிறார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங் களை முதல்-அமைச்சர் விஜய் மக்களின் பயன்பாட்டுக்காக வழங்கி வருகிறார். இதற்காக மாவட்டம் வாரியாக செல்லும் அவர் அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், 'ரோடு ஷோ' வாயிலாக பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.

இந்தநிலையில் ஈரோடு மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் தொடங்குவதற்காக வங்கிக்கடன் வழங்கும் அரசு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு நடக்கிறது.

பெருந்துறை 4 வழிச்சாலை காஞ்சிக்கோ வில் ரோட்டில் உள்ள ஸ்ரீலட்சுமி நாராயணா மகாலில் நடை பெறும் இந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்களுக்கு வங்கிக்கடன் மற்றும் ரூ.1,110 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள மகளிர் குழுவினர் அமைத்துள்ள கண்காட்சி அரங்கினையும் முதல்-அமைச்சர் விஜய் பார்வையிடுகிறார்.

ரோடு ஷோ'

முன்னதாக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், கோவை விமான நிலையத்துக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் ஈரோடு வருகிறார். விஜயமங்கலம் தாண்டியதும் சிப்காட் பகுதி வழியாக ஈரோடு சாலை வரும் முதல்-அமைச்சர் பெருந்துறை நகர் வழியாக 'ரோடு ஷோ' செல்கிறார்.

பின்னர் அரசு விழா நடைபெறும் காஞ்சிக்கோவில் சாலை பிரிவு வரை 5 அல்லது 7 இடங்களில் அவர் வாகனத்தில் இருந்து இறங்கி மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசு விழா நிறைவடைந்ததும், பெருந்துறையிலேயே மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, அங்கேயே முதல்-அமைச் சர் உணவு அருந்துவதாகவும், பின்னர் சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் சென்று சென்னை புறப்படுவதாகவும் தெரிகிறது. முதல்-அமைச்சர் விழாவையொட்டி ஈரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT