சென்னை,
முதல்-அமைச்சர் விஜய் மீண்டும் வெளிநாடு செல்கிறார். அடுத்த ஆண்டு ஜனவரியில் அவர் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் தொழில் முதலீடு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் விஜய், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் கிளோஸ்டர்ஸ் நகரில் அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 22ம் தேதி வரைநடை பெறவுள்ள உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு கூட் டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகின் முக்கிய அரசியல் தலைவர்கள், கொமில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பதன் மூலம், தமிழகத்தின் முதலீடு மற்றும் தொழில் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மேலும் முக்கியத்துவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி அலோய்ஸ் ஸ்விங்ஜி, நிர்வாக இயக்குநர் மாரோன் கைரூஸ் ஆகியோரின் அழைப்பை ஏற்று முதல்-அமைச்சர் விஜய் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் 100 க்கும்மேற்பட்டநாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள், 1,000க்கும் மேற்பட்ட முன்னணி உலகளாவிய நிறுவனங்கள், சர்வ தேச அமைப்புகள், சிவில் சமூகபிரதிநிதிகள்,கல்வியாளர்கள் மற்றும் ஊடகங்க ளைச்சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்.
உலகின் பல்வேறு நாடுகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் ஒரே இடத்தில் கூடும் இந்த மாநாட்டில், பொருளாதாரம், முதலீடு, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்படுவதுடன் உலகளாவிய பிரச்சினைகளுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும்.
முதல்-அமைச்சர் விஜய்யின் டாவோஸ் பயணம் தமிழக அரசின் முதலீடு மற்றும் தொழில் கொள்கை தொடர்பான அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முதலீட்டை ஈர்ப்பது மற்றும் தொழில் கொள்கைகள் தொடர்பான விவாதங்களில் அரசியல் தலைமை நேரடியாகவும் அதிக அளவிலும் பங்கேற்கும் சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர்கூறுகையில், டாவோஸ் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்பதன் மூலம் அரசின் அணுகு முறையில் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்புள்ளது. முதலீட்டு வசக்குவிப்பு மற்றும் தொழில் கொள்கை தொடர்பானவிவாதங்களில் அரசியல் தலைமை அதிக அளவில் பங்கேற்கும் வாய்ப்பை இது ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார்.
உலகின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே முதலீடுகளை ஈர்ப்பதற்கான போட்டி அதிகரித்து வரும் நிலையில், தமிழகமும் சர்வதேச முதலீடுகளை ஈர்ப்பதிலும், வளர்ந்து வரும் தொழில் துறைகளுக்கான முக்கிய மையமாக தன்னை நிலைதிறுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, எதிர்காலத்தில் வேகமாக வளரக்கூடிய தொழில் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில், டாவோஸ் உலக பொருளா தார மன்றத்தில் முதல-மைச்சர் விஜய் பங்கேற்பது தமிழகத்தின் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த சர்வதேச அளவிலான கவனத்தை ஈர்ப்பதற்கான வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை டாவோஸ் உலக பொருளாதார மாநாட் டில் முன்னாள் தொழில்துறை அமைச்சர்கள் மட்டுமே பெருமளவில் பங்கேற்று வந்த நிலையில், தற்போது, முதல்-அமைச்சர் விஜய் நேரடியாக இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுவது பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது.