சென்னை,
தமிழகத்தின் 13வது முதல்-அமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று காலை பதவியேற்றார். தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முதல்-அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த முதல்-அமைச்சர் விஜய் முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், முதல்-அமைச்சர் விஜய் சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு வந்துள்ளார். அவர் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியை சந்தித்தார். பெரியார் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.