தமிழக செய்திகள்

கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

கமல்ஹாசன் கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகளைப் பெற வாழ்த்துவதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நல்ல உடல் நலத்துடன், கலைத்துறை மற்றும் பொது வாழ்வில் மேலும் பல சிறப்புகள் பெற்று தனது பணியை தொடர எனது வாழ்த்துகள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT