சென்னை,
இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி திரவுபதி முர்மு, இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல உடல்நலத்துடன் இந்திய திருநாட்டிற்கான தங்களின் அர்ப்பணிப்பான சேவை மேலும் சிறக்க இந்த இனிய நாளில் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.