தமிழக செய்திகள்

நேற்று ராகுல் காந்தியுடன், இன்று பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் விஜய்..! அடுத்தடுத்த நாட்களில் நிகழ்ந்த சுவாரசியம்

நேற்று ராகுல்காந்தியுடன் ஒரே காரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் மெட்ரோ ரெயிலில் பயணித்தார்.

சென்னை,

நேற்று ஒரே காரில் ராகுலு டன் சென்ற முதல்-அமைச்சர் விஜய், இன்று பிரதமர்மோடியுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார்.

த.வெ.க. கூட்டணி

கடந்த சட்டசபைத் தேர்தலில் முதல்-அமைச்சர் விஜய்யின் த.வெ.க. கட்சி ஆட்சி அமைக்கக்கூடிய அறுதி பெருப்பான்மை பெறவில்லை. மாறாக 107 இடங்களை மட்டுமே பெற்றது. எனவே காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி தற்போது த.வெ.க. கூட்டணி அரசில் இடம் பெற்றுள்ளது.

முதல்-அமைச்சர் விஜய்

இந்நிலையில் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி நேற்று (10.10.2026) சென்னை வந்திருந்தார். அப்போது அவர் கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்துப் பேசினார்.

அதற்காக அவர் விமான நிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதல்-அமைச்சர் விஜய் வீட்டிற்கு சென்றார். அங்கு அவருக்கு முதல்-அமைச்சர் விஜய் மதிய உணவு விருந்து அளித்தார். அதன்பின்னர் இரு தலைவர்களும் தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். அதையடுத்து ராகுல் காந்தியும், முதல்-அமைச்சர் விஜய்யும் நீலாங்கரை இல்லத்தில் இருந்து புறப்பட்டு ஒரே காரில் பயணம் செய்தனர்.

ராகுல் காந்தி - பிரதமர் மோடி

தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான ஒரு உணவகத்திற்கு சென்று தேநீர் அருந்தினர். நேற்று காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தியுடன் ஒரே காரில் சென்ற முதல்-அமைச்சர் விஜய் இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் மெட்ரோ ரெயிலில் பயணித்தார்.

பூந்தமல்லி - வடபழனி இடையே சென்னை 2-ஆம் கட்ட திட்டத்தின் 4 -ஆவது வழித்தடத்தில் இயக்கப்படும் மெட்ரோ ரெயிலை பிரதமர் மோடி இன்று (11.10.2026) காலை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் விஜய்யும் கலந்து கொண்டார். விழா முடிந்ததும், பிரதமர் மோடியுடன் போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட ரெயிலில் அவர்பயணம் செய்தார்.

நேற்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருடனும், இன்று பிரதமர்மோடியுடனும் முதல்-அமைச்சர் விஜய் அடுத்தடுத்த நாட்களில் பயணம் செய்த இந்த சுவாரசிய நகர்வுகள் பொதுமக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

SCROLL FOR NEXT