சென்னை,
சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரனுக்கு முதல்-அமைச்சரும், பெரம்பூர் எம்.எல்.ஏ.வுமான விஜய் கடிதம் எழுதி உள்ளார்.
பெரம்பூர் பகுதி மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் திட்டங்களுக்காக, தனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.3 கோடியை ஒதுக்கீடு செய்யுமாறு, முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில்,
* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை, சிட்கோ நகர், எஸ்.எம். நகர், எம்.கே.பி. நகர் மற்றும் வியாசர்பாடி மேம்பாலச் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில், சிசிடிவி (CCTV), வைபை (Wi-Fi) மற்றும் 24 மணி நேரக் கண்காணிப்பு வசதிகளுடன் கூடிய 6 நவீன பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்படுவதன் மூலம் பெண்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.
* மேயர் கிருஷ்ணமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் விளையாட்டு வளாகம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
* கூடைப்பந்து, கிரிக்கெட், கபடி விளையாட்டு வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை மேம்படுத்த அம்பேத்கர் கலைக் கல்லூரிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கப்படும்.
* சத்தியமூர்த்தி நகரில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் டயாலிசிஸ் (சிறுநீரகச் சுத்திகரிப்பு) மையம் அமைக்கப்படும்.
* எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 'தற்காலிகப் பணியாளர்களுக்கான' (Gig Workers) ஓய்வறை அமைக்கப்படும்.
* அம்பேத்கர் கல்லூரியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நூலகம் மற்றும் பயிலரங்கம் (Study Centre) உருவாக்கப்படும்.
* அங்கன்வாடி மையங்களுக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான அத்தியாவசிய உபகரணங்கள் வழங்கப்படும்.
மேற்கூறிய அனைத்துப் பணிகளையும் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் பரிந்துரைத்துள்ளார்.
இந்ததிட்டங்கள் அனைத்தும் உடனடியாக தொடங்கப்பட உள்ளநிலையில், பெரம்பூர் பகுதி விரைவான வளர்ச்சியையும், மேம்பட்ட பொது வசதிகளையும் பெறும்.