தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய் பிறந்தநாள் - ஜி.கே. வாசன் வாழ்த்து

மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நல்லாட்சியை அளிக்க வேண்டும்.

சென்னை,

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

இன்று பிறந்தநாள் காணும் தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்-அமைச்சரும் ஆன ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள். தமிழக அரசியலில் புதிய மாற்றங்களை கொண்டு வந்து, மக்களின் மனங்களை வென்று தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தாங்கள், மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் நல்லாட்சியை அளிக்க வேண்டும்,

நீடுழி வாழ்க

அதற்கு எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்க வேண்டும். மக்கள் நலன் சார்ந்து தாங்கள் எடுக்கும் அத்துணை முயற்சிகளும் வெற்றிப் பெறவும், தாங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு நீடுழி வாழவும் எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.