சென்னை,
சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் ஆஸ்பத்திரி வளாகத்தில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது:- கருணாநிதி விட்டு சென்ற இடத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் அதே வழியில் ஆட்சியை நடத்தினார். எந்த அரசு வந்தாலும் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களை யாரும் அழித்துவிட்டு ஆட்சி செய்ய முடியாது. இந்தியா மட்டுமல்லாமல் உலகத்தின் பல பகுதிகளுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இன்றைக்கு சிலர் திராவிடம் காணாமல் போய்விட்டது என்றெல்லாம் கூறலாம். திராவிடத்தை ஒருபோதும் அழிக்க முடியாது. அது என்றும் வாழும்.
முதல்-அமைச்சர் விஜய் திருச்சியில் பேசியதை பார்க்கும் போது, அவர் முதல்-அமைச்சர் என்பதை மறந்து பழைய தேர்தல் பேச்சை பேசி இருப்பதாகவே உள்ளது. இது போன்ற போக்கை முதல்-அமைச்சர் மாற்றிக்கொள்ள வேண்டும். அரசியல் அனுபவம் இல்லாமல் பேசுவது ஏற்புடையதல்ல. எதிர்க்கட்சிகள் என்னென்ன குறைகள் சொல்கிறார்கள் என்பதை கேட்டு அதனை சரி செய்ய வேண்டும். முதல்-அமைச்சரின் திருச்சி பேச்சு மாற்றத்தை தரவில்லை ஏமாற்றத்தை தந்துள்ளது.
இவ்வாறு அவா் கூறினார்.