திருச்சி,
முதல் -அமைச்சர் விஜய் புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக நாளை திருச்சி மாவட்டத்தில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீக் தயாள் தாயள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.