தமிழக செய்திகள்

மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இன்று ஆலோசனை

மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.

சென்னை,

தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமார். இவர் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

மாலை ஆலோசனை

காணொலி வாயிலாக இந்த ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், வருவாய் உள்பட முக்கிய துறைகளின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மாவட்ட கலெட்கர்களுடன் அவர் ஆய்வு செய்கிறார். இன்று மாலை 4.30 மணிக்கு ஆலோசனை கூட்டம் தொடங்குகிறது.