தமிழக செய்திகள்

குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரம் - இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

குழந்தையின் விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோருக்கு இழப்பீடு வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

தஞ்சையில் பிறந்து 14 நாட்கள் ஆன குழந்தையின் கட்டை விரலை துண்டித்த அரசு செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த கனேசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், குழந்தையின் கட்டை விரல் துண்டிக்கப்பட்ட விவகாரத்தில் குழந்தையின் பெற்றோருக்கு 4 வாரத்துக்குள் இடைக்கால நிவாரணமாக ரூ. 75 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குழந்தையின் கட்டை விரலை பழையபடி சேர்க்கும் வகையில் நவீன மருத்துவமனைக்கு மாற்றம் செய்வது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை, தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி முதல்வர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 26ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT