தமிழக செய்திகள்

குழந்தைக்கு பாலியல் கொடுமை: குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

நெல்லையை சேர்ந்த நபர் ஒருவர், பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தார்.

நெல்லை,

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, வண்ணார்பேட்டை. பரணிநகரைச் சேர்ந்த நடராஜன் மகன் கணேசமூர்த்தி (வயது 45) என்பவர் ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தி, அதன்மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மனதில் பாலியல் தாக்குதல் குறித்த பீதியையும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தி, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்த "பாலியல் குற்றவாளி” ஆவார்.

இதனையடுத்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார்.