தமிழக செய்திகள்

குழந்தைகள் தினம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

இந்தியாவில் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஏராளமான திட்டங்கள்

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்

அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்!

அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது திராவிட மாடல் ஆட்சியில்,

  • ஊட்டச்சத்தை உறுதிசெய்

  • அன்புக்கரங்கள்

  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

  • இல்லம் தேடிக் கல்வி

  • எண்ணும் எழுத்தும்

  • வானவில் மன்றம்

  • வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம்

வாழ்த்துகள்

எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்!

குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்!

திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்!

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT