தமிழக செய்திகள்

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நாளை நடைபெற இருக்கிறது.

சென்னை,

தமிழ் மாதங்களில் வரும் பவுர்ணமி நாளில் திருவண்ணாமலையில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு பஸ்கள் சென்னை, வேலூர், திருத்தணி, காஞ்சிபுரம், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிதம்பரம், விழுப்புரம், ஓசூர் மற்றும் பெங்களூருவில் இருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம் நாளை நடைபெற இருக்கிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி தமிழக போக்குவரத்துத்துறை திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 548 பேருந்துகளும், நாளை 565 பேருந்துகளும், மாதவரத்திலிருந்து இன்று 186 சிறப்பு பேருந்துகளும், நாளை 174 சிறப்பு பேருந்துகளும், அடையாறிலிருந்து இன்று 55 பேருந்துகளும், மே 2-ம் தேதி 50 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.