தமிழக செய்திகள்

அதிகாரிபட்டி அன்னை ஆலய திருவிழா

அதிகாரிபட்டியில் உள்ள ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

சாணார்பட்டி அருகே அதிகாரிபட்டியில் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் திருவிழா கடந்த 3 நாட்கள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மின்னொளி சப்பர பவனி நடைபெற்றது. இதேபோல் நேற்று பகல் சப்பர பவனி நடைபெற்றது. இதில் அதிகாரிபட்டி, வங்கமனூத்து மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT