தமிழக செய்திகள்

காரில் கஞ்சா, 60 மதுபாட்டில்கள் கடத்தல்: சினிமா நடன கலைஞர் கைது

சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் கஞ்சா மற்றும் 60 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

சென்னை,

சென்னை போரூர் பகுதியில் காரில் கஞ்சா, 60 மதுபாட்டில்கள் கடத்திய சினிமா நடன கலைஞரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வாகன சோதனை

சென்னை போரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் கஞ்சா மற்றும் 60 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

சினிமா நடன கலைஞர் கைது

காரில் வந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சாய்கிரண் (வயது 28) என்பதும், சினிமா துறையில் பின்னணி நடன கலைஞராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர், போதிய வருமானம் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கஞ்சா, மதுபாட்டில்கள், போதைப்பொருள் பறிமுதல்

பெங்களூருவில் தனது நண்பரை இறக்கிவிட்டு திரும்பும்போது வெளிமாநில மதுபாட்டில்களை வாங்கி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தி 2 கிலோ கஞ்சா, மதுபாட்டில்கள், மெத்தபெட்டமைன் போதைப்பொருள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT