தமிழக செய்திகள்

நடத்துனரை தற்கொலைக்கு தூண்டிய கிளை மேலாளர் மீது நடவடிக்கை கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி நகர பணிமனையில் அரசு போக்குவரத்துக்கழக நடத்துனராக பணியாற்றி வருபவரை, கிளை மேலாளர் ஒருவர் அசிங்கமாக பேசி, மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படுறது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் அரசு போக்குவரத்துக்கழக நடத்துனரை தரக்குறைவாக பேசி, தற்கொலைக்கு தூண்டிய கிளை மேலாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகரப் பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நடத்துனரை தற்கொலைக்கு தூண்டிய கிளை மேலாளர்

நடவடிக்கை எடுக்கக்கோரி நகர பணிமனையில் அரசு போக்குவரத்துக்கழக நடத்துனராக பணியாற்றி வரும் ஆறுமுகம் என்பவரைக் கிளை மேலாளர் சுரேஷ் என்பவர் அசிங்கமாக பேசி, மிரட்டி தற்கொலைக்கு தூண்டியதாகவும், விடுப்புகள் வழங்க கூடுதல் நேரம் வேலை பார்க்கச் சொல்லி மிரட்டுவதாகவும், தொழிலாளர்களை கூடுதல் பணி பார்க்கச் சொல்லி வற்புறுத்துவதாகவும் தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

நடவடிக்கை எடுக்கக்கோரி சி.ஐ.டி.யூ. ஆர்ப்பாட்டம்

இதை கண்டித்தும், கிளை மேலாளர் மீது துறைரீதியான வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள நகரப் பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். இந்த போராட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT