சென்னை
அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (UPSC) நடத்தப்படும் குடிமைப்பணி (முதல்நிலை) தேர்வு 24.05.2026 அன்று நடைபெற்றது. இத்தேர்விற்கான முதல் நாள் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் இரண்டாம் தாள் 2.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் நடைபெற்றது. இத்தேர்விற்காக விண்ணப்பித்தவர்களில் சென்னை மாவட்டத்தில் 23,120 தேர்வர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டனர். அவர்களுக்கு 82 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. அதில் 16,626 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரிந்தனர். 6,494 தேர்வர்கள் தேர்விற்கு வருகை புரியவில்லை.
இத்தேர்விற்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்திலிருந்து 5 கண்காணிப்பு அலுவலர்களும், மாநில அரசின் 5 இந்திய ஆட்சிப்பணி நிலை உயர் அலுவலர்களும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டார்கள்.
சென்னை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள R2 தேர்வு மையங்களுக்கு 27 வழித்தடங்களில், 27 துணை ஒருக்கிணைப்பு அலுவலர்கள் மூலம் மந்தணத்தாட்கள் உள்ளிட்ட ஆவணங்கள் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இத்தேர்விற்கு 82 தேர்வு மையக்கண்காணிப்பாளர்களும் (Venue Supervisor) தேர்வு மைய ஆய்வு அலுவலர்கள் (Inspecting Office) 82
பேரும். தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் 1,968 பேரும், Face Authentication பணியில் ஈடுபடுவதற்கென 246 நபர்கள் என மொத்தம் 2,378 பேர் தேர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
Face Authentication App மூலம் தேர்வர்களின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் புகைப்படத்திற்கும், தேர்வெழுத வருகைபுரிந்த தேர்வர்களின் புகைப்படத்தினையும் ஒப்பு நோக்கி வருகை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்காண் தேர்வு சார்ந்து புகார் ஏதும் பெறப்படவில்லை என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.