தமிழக செய்திகள்

விருகம்பாக்கத்தில் தவெக நிர்வாகிகள் இடையே மோதல்

'ஜனநாயகன்' படத்துக்கான கட்-அவுட்டில் உமர் பரூக் பெயர் இல்லாததால் இந்த மோதல் நடந்திருப்பது தெரியவந்தது.

சென்னை,

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சுரேந்திரன். த.வெ.க.வில் 127-வது வார்டு வட்ட செயலாளராக இருந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு த.வெ.க. 128-வது வட்ட செயலாளர் சுப்பிரமணியன் என்பவர் சுரேந்திரனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தசரதபுரம் பஸ் நிறுத்தம் அருகில் வருமாறு அழைத்தார். சுரேந்திரனும் அங்கு சென்றார்.

அங்கு சுரேந்திரன், தென் சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் உமர் பரூக், அவரது நண்பர்கள் 2 பேருடன் சுப்பிரமணி கட்சி பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பானது.

உமர்பரூக் ஆபாசமான வார்த்தைக ளால் பேசி கையால் சுரேந்திரனை குத்தியதாகவும், இதில் சுரேந்திரன் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டு கே.கே.நகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணை யில் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் திரையிடப்பட இருந்த 'ஜனநாயகன்' படத்துக்கான கட்-அவுட்டில் உமர் பரூக் பெயர் இல்லாததால் இந்த தாக்குதல் நடந்திருப்பது தெரியவந்தது. இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT