சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதையடுத்து, தமிழக சட்டசபை இன்று கூடியது. சட்டசபை கூட்டம் நிறைவடைந்த உடன் முதல்-அமைச்சர் விஜய் அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக, மரியாதை நிமித்தமாக எதிர்க்கட்சி தலைவர்களை அவர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். அந்த வகையில் திமுக தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று சந்தித்தார்.
இந்நிலையில், மு.க.ஸ்டாலின் , வைகோவை தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் தற்போது நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். முதல்-அமைச்சர் விஜய்யை அன்புமணி ராமதாசும், அவரது மனைவி சவுமியா அன்புமணியும் வாசலுக்கே நேரில் சென்று வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாசிடம் முதல்-அமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். பின்னர், அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.