தமிழக செய்திகள்

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சி.எம்.டி.ஏ.வே உடனடியாக அனுமதி வழங்கலாம்: தமிழக அரசு உத்தரவு

அடுக்குமாடி கட்டிடங்களுக்கான அனுமதி பெற இனி காத்திருக்க வேண்டியதில்லை, சி.எம்.டி.ஏ.வே உடனடியாக அனுமதி வழங்கலாம் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இதுநாள் வரை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியானது, கட்டிடம் கட்டுபவர்களால் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டு, அவ்விண்ணப்பத்தை கள ஆய்வு மற்றும் கூர்ந்தாய்வு செய்து பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட்டு பல அடுக்குமாடி கட்டிட குழுவால் பரிசீலனை செய்து அக்குழுவின் பரிந்துரையின்படி அரசுக்கு சமர்பித்து அரசாணை பெற்ற பின் பலஅடுக்குமாடி திட்ட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின்படி சென்னை பெருநகரப் பகுதியில் பல அடுக்கு மாடி கட்டிட திட்ட அனுமதியை எளிமையான முறையில் விரைவில் பெறுவதற்காகவும், ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறையினால் ஏற்படும் கால தாமத்தை தவிர்ப்பதற்காகவும், இனிவரும் காலங்களில் கட்டிடதாரர்களுக்கு ஏற்படும் கால தாமதம் குறைப்பதற்காகவும், குறைந்த நேரத்தில் ஒப்புதல்களை வழங்கவும், கட்டிட விதிமுறைகள் மற்றும் கட்டிட விதிகளுக்கு உட்பட்டு, பல அடுக்குமாடி கட்டிடக் குழுவின் பரிந்துரையின் அடிபப்டையில், பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கான திட்ட அனுமதியை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமே(சி.எம்.டி.ஏ.) வழங்கலாம் என அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT