தமிழக செய்திகள்

ரூ.5.25 கோடி மதிப்புள்ள நல்லபாம்பு விஷம் பறிமுதல்: 5 பேர் கைது

வனவிலங்கு கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

மும்பை,

மும்பையை அடுத்த தானே மாவட்டம் காஷிகாவ் பகுதியில் உள்ள டோடியா பெட் ரோல் பங்க் அருகே வனவிலங்கு கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகப்படும் வகையில் நடமாடிய முகமது டேனிஷ் பயிம் கான்(வயது23), அப்துல் கரீம் ரஷீத் அகமது ஷேக்(51) ஆகிய 2 பேரை மடக்கிப்பிடித்து சோதனையிட்டனர்.

இந்த சோதனையில் அவர்கள் வைத்திருந்த 2 கண்ணாடி குப்பிகளில் முறையே 250 மில்லி கிராம் மற்றும் 260 மில்லி கிராம் எடையுள்ள நல்லபாம்பு விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு ரூ.5 கோடியே 25 லட்சம் என தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே இருந்த மற்றொரு நபரான பைசான் அப்துல் அஜீஸ்(30) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின்பேரில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மும்பை மான்கூர்டு டிராம்பே பகுதியைச்சேர்ந்த முக்கிய வினியோகஸ்தர்களான பாரூக் அலி அப்துல் அலி(37), நூர் முகமது வாலி முகமது ஷேக்(47) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கடத்தல் கும்பல் மீது காஷிகாவ் போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT