கோவை,
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கார்த்திக் (வயது 34), அவருடைய நண்பர் மோகன் (31) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசிடம் இருந்து தப்பிச்செல்ல மாடியில் இருந்து குதித்தபோது கார்த்திக்கின் கை, கால் முறிந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் கைதான 2 பேரிடமும் விரிவான விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். எனவே கார்த்திக், மோகன் ஆகிய 2 பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு போக்சோ சிறப்பு கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்தனர்.
அதை விசாரித்த நீதிபதி பகவதியம்மாள், கைதான 2 பேரையும் 3 நாட் கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார். அதன்படி போலீசார் அந்த 2 பேரையும் காவலில் எடுத்து பாதுகாப்பாக அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
இதில் சிறுமியை பலாத்காரம் செய்தது கார்த்திக் என்பதும், அதற்கு மோகன் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை கடத்திச்சென்றது எப்படி?, சிறுமிக்கு கடையில் வாங்கி கொடுத்தது என்ன?, குளக்கரைக்கு என்ன சொல்லி அழைத்துச் சென்றார்? என்பது குறித்து கார்த்திக் நடித்து காட்டினார்.
அதுபோன்று பலாத்காரம் செய்த இடத்துக்கும் போலீசார் கார்த்திக்கை அழைத்துச்சென்றனர். அங்கு அவர் அந்த சிறுமியை கொலை செய்தது எப்படி என்று நடித்து காட்டினார்.
போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து நேற்று கார்த்திக், மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கோவையில் உள்ள போக்சோ கோர்ட் டுக்கு பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி பகவதியம்மாள், அந்த 2 பேரையும் வருகிற 12-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். உடனே கார்த் திக், மோகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.