கோவை,
கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அஞ்சிதா (35) இவர் கோவை விமான நிலையத்தில் சிவில் என்ஜினீயரிங் பிரிவில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அஞ்சிதா நீண்ட நேரமாகியும் பணிக்கு வராததால் சந்தேகமடைந்த அலுவலக பொது மேலாளர் போஜன் உடனடியாக அஞ்சிதா தங்கி இருந்த விமான நிலைய குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தார்.
விட்டிற்கு வந்த போஜன் நீண்ட நேரமாக கதவை தட்டினர். ஆனால் அஞ்சிதாவிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை, இதனால் பீளமேடு போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அஞ்சிதா வீட்டிற்கு உள்ள அறையில் தூக்கு போட்டு தொங்கினார்.
பின்னர் அவரது உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அஞ்சிதாவுக்கு வயது 35, அவருக்கு நீண்ட வருடங்களாக திருமணம் ஆகவில்லை.
இதனால் விரக்தியில் இருந்த அஞ்சிதா, தனது சகோதரி மகளுக்கு அவரது செல்போன் அன்லாக் எண் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.