கோவை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் ஒரு சிறுத்தை, பூனையை வேட்டையாட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை முருகாளி எஸ்டேட் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சுவர் மீது அமர்ந்திருந்த பூனையை, அங்கு வந்த சிறுத்தை துரத்தியது.
சுவர் மீது நடந்து சென்று வேட்டையாட முயன்றபோது, பூனை கீழே குதித்து தப்பியது. அப்போது அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் சிறுத்தையை கண்டு பீதியடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.