பாலக்காடு,
பாலக்காடு ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நாட்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில ரெயில் சேவைகள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட உள்ளன. இதன் ஒரு பகுதியாக சொரனூர்-கோவை பயணிகள் ரெயில் வருகிற 20, 29-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
22-ந் தேதி வழக்கமாக 8.20 மணிக்கு பதிலாக காலை 8.50 மணிக்கு சொரணூரில் இருந்து புறப்படும்.
கோவை-சொரனூர் பயணிகள் ரெயில் 20-ந்தேதி முழுமையாக ரத்து செய்யப்படும். பயணிகள் தங்கள் பயணத்தின் போது ரெயில்வே கால அட்டவ ணையை சரிபார்த்து கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி உள் ளது.